Nilgiri Chicken Korma :

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ, வெங்காயம் – 2,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1டேபிள்ஸ்பூன்,
தக்காளி – 1,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு.

அரைக்க:

சீரகம் – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
கசகசா – 1 டீஸ்பூன்,
பட்டை – 1 இன்ச்,
ஏலக்காய் – 2,
துருவிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன், முந்திரி – 8,
பச்சை மிளகாய் – 4,
கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன், புதினா – 2 டேபிள் ஸ்பூன் ,

செய்முறை:

டேஸ்ட்டான வெஜ் ஸ்பிரிங் ரோல்

1) முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

2) பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்து வதக்க வேண்டும்.

3) அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கிளறி விட வேண்டும். பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, பிரட்டி, தண்ணீரை ஊற்றி, வேக வைத்து இறக்க வேண்டும்.

4) இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here