சின்னத்திரை நடிகையான நிலானி சமீபத்தில் உதவி இயக்குனரும் ஆண் நண்பருமான லலித் குமார் காந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வருவதாகவும் படப்பிடிப்பு தலங்களுக்கும் வந்து பிரச்சனை செய்வதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து லலித் குமார் சென்னை kk நகரில் நடுரோட்டில் தீக்குளித்தார். அதன் பின்னர் கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது லலீத்தின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிலானி லலீத் காந்தியுடன் சேர்ந்து கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்ததாக கூறி புகைப்படங்கள், விடியோக்கள் ஆதாரங்களை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நிலானி லலித் காந்தியுடன் படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் நிலானி தான் நாடகடுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லலித் நிலானிக்கு மெட்டி போட்டு விட்டுள்ள வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவ தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.