நடிகை நிக்கி கல்ராணிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nikki Galrani Marriage Details : தமிழ் சினிமாவில் மரகத நாணயம், ஹர ஹர மஹாதேவகி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிக்கி கல்ராணி. இந்த படங்கள் மட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை நிக்கி கல்ராணிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இந்த தமிழ் நடிகர் தானாம்? தீயாக பரவும் செய்தி

இவர் மரகத நாணயம், யாகாவராயினும் நாகாக்க உள்ளிட்ட படங்களில் நடிகர் ஆதியுடன் இணைந்து நடித்திருந்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றாற்போல நிக்கி கல்யாணி ஆதி வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

நடிகை நிக்கி கல்ராணிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இந்த தமிழ் நடிகர் தானாம்? தீயாக பரவும் செய்தி

இந்த நிகழ்ச்சியில் விரைவில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.