திருமணம் முடிந்த கையோடு சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார் நிக்கி கல்ராணி.

தமிழ் சினிமாவின் டார்லிங், மரகதநாணயம், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிக்கி கல்ராணி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த இவர் தன்னுடன் இணைந்து சில படங்களில் நடித்த நடிகர் ஆதியை காதலித்து வந்தார்.

திருமணம் முடிந்த கையோடு சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நிக்கி கல்ராணி ‌- வெளியான அதிரடி தகவல்

இதுவரை பல வருடங்களாக காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் திருமணமும் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு நிக்கிகல்ராணி சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

ஆமாம் அடுத்த மாதம் முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெல்லும் தாமரை என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில்தான் நடுவர்களில் ஒருவராக நிக்கி கல்ராணி பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நிக்கி கல்ராணி ‌- வெளியான அதிரடி தகவல்

திருமணம் முடிந்த கையோடு நிக்கி கல்ராணி சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில் இனி படங்களில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.