Niharika Review on Master

லேட்டா படம் பார்த்தாலும் மாஸ்டர் பட்டத்தை செம்ம மாஸாக விமர்சனம் செய்துள்ளார் வாரிசு நடிகை நிஹாரிகா.

Niharika Review on Master : தமிழ் சினிமாவில் கௌதம் கார்த்திக் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தனர் நிஹாரிகா.

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் தம்பி மகளான நிகாரிகா இந்த படத்திற்கு பிறகு அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

லேட்டா படம் பார்த்தாலும் செம மாஸா விமர்சனம் செய்த வாரிசு நடிகை.. வெளியான பதிவை தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.!!

அதற்குள் லாக்டவுன் போடப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிப்போனது‌. இதற்கிடையில் நிகாரிகாவுக்கு திருமணமும் நடந்து முடிந்து விட்டது.

இதனால் அவர் அசோக் செல்வன் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

இந்தநலையில் தற்போது இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்த முதல் திரைப்படம் மாஸ்டர் எனக்கூறி அந்த படத்தை விமர்சனம் செய்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் செம விருந்து, விஜய் சார் கலக்கிவிட்டார், எனக்கு பிடித்த நடிகரான விஜய் சேதுபதி எப்பவும் போல சூப்பர்.

லோகேஷ் சார் கைதி திரைப்படம் எனக்கு பிடிக்கும், மாஸ்டர் ஆல்ரவுண்டர் என தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் என குறிப்பிட்டுள்ளார்.

அனிருத்தின் இசை அட்டகாசம் எனவும் தெரிவித்துள்ளார்.

லேட்டாக படம் பார்த்து லேட்டஸ்ட்டாக விமர்சனம் செய்த நிஹரிகாவின் பதிவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ பாருங்க