NGK Updates
NGK Updates

NGK Updates : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேர்கொண்ட பார்வையில் இருந்து வந்த இன்னொரு புகைப்படம் – டிரெண்ட் செய்யும் தல ரசிகர்கள்!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இயக்குநரான எனை நோக்கி பாயும் தோட்டா பிரபலம் – ஆனால் படம் மட்டும் இன்னும் வரல!

இதைதொடர்ந்து தற்போது இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

முருகதாஸ், ரஜினி இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

இது ஒருபக்கம் இருக்க தற்போது இப்படத்தின் சேட்டிலைட் உரிமையும் விற்கப்பட்டுள்ளதாம். பிரபல விஜய் தொலைக்காட்சி இதன் உரிமையை ரூ. 12 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.