NGK Update

NGK Update : சூர்யா நடித்து வரும் NGK படத்தின் அடுத்த புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் NGK. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென பாதியிலேயே நின்றது.

அதன் பின்னர் சூர்யா கே.வின் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிப்படாத படமான சூர்யா 37 படத்தில் நடிக்க சென்று விட்டார்.

அதன் பிறகு NGK பட அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருந்து வந்தனர்.

பின்னர் எதிர்பாராத விதமாக தீபாவளியில் NGK படத்தின் நியூ லுக்கை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.

இதனையடுத்து தற்போது மற்றொரு சூப்பர் அப்டேட்டும் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் NGK படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ளது.

15 நாட்கள் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளது. அதன் பின்னர் NGK படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கான வேலைகளை நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.