NGK Update

NGK Update : எதிர்பாராத நேரத்தில் NGK படத்தின் அப்டேட்டை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை குஷியாக்கியுள்ளது படக்குழு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 37 படத்திலும் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் NGK படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஒரு அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளனர். அது என்னவென்றால் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்கான இசை பணிகளும் தொடங்கியுள்ளன. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகையான ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NGK அப்டேட் பற்றி தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட் : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.