NGK Teaser Release

NGK Teaser : சூர்யாவின் NGK டீசரில் இருந்து சில காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளன. அந்த வீடியோக்களை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துள்ளார்.

தீபாவளிக்கே வெளியாக இருந்த இந்த திரைப்படம் படப்பிடிப்புகள் முடிவடையாததால் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே வந்தது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதனால் ரசிகர்கள் இப்படத்தின் டீஸருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த டீசரில் இருந்து 8 நொடி காட்சிகள் லீக்காகியுள்ளன.

அதில் சூர்யா காத்திருப்போம் என கூறுகிறார். இதனை ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.

டீஸர் லீக்காகியது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் கூலாக HD & 2K வெர்ஷன் மாலை 6 மணிக்கு சொன்னபடி வெளியாகும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.