Ngk Team to Meet Fans : Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | NGK Movie | Kollywood

Ngk Team to Meet Fans :

தெலுங்கில் இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு அதாவது மே 28-ம் தேதி சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ரசிகர்கள் முன்பு தோன்ற இருக்கிறார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

என்.ஜி.கே படத்த இங்கதான் பார்ப்பேன் – ரகுல் ப்ரீத் சிங் சொன்ன இடம் எது தெரியுமா?

இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தை மிக தீவிரமாக படக்குழு விளம்பரம் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தெலுங்கில் இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு அதாவது மே 28-ம் தேதி சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ரசிகர்கள் முன்பு தோன்ற இருக்கிறார்கள்.

தெலுங்கிலும் இப்படம் அதே நாளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.