NGK Surprise for Fans Before Release | Suriya | Sai pallavi | Rakul Preet | Yuvan Shankar Raja | Selvaraghavan | Kollywood | Tamil Cinema

NGK Surprise for Fans Before Release :

என்.ஜி.கே படத்தில் புதிதாக ஒரு பாடல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக தயாராகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்த பாடலையும் உமா தேவி எழுதியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Mr லோக்கல் படத்தில் ஒன்னு இல்ல 4 இடத்தில் தல ரெஃப்ரென்ஸ் – இதை கவனித்தீர்களா?

இந்நிலையில் தற்போது இந்த பாடல்கள் போக புதிதாக ஒரு பாடல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக தயாராகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்த பாடலையும் உமா தேவி எழுதியுள்ளார்.

இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இது ஒருபக்கம் இருக்க டிவிட்டரில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக என்.ஜி.கே என்று ஆங்கிலத்தில் ஹேஷ் டாக் மூலம் டைப் செய்தால் சூர்யாவின் எமோஜி முகம் தோன்றுமாம்.

ஏற்கனவே மெர்சல், காலா படங்களுக்கு இந்த விளம்பர யுக்தி கையாண்ட நிலையில் தற்போது அதில் இந்த படமும் இணைந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.