Ngk Suriya
Ngk Suriya

Ngk Suriya : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

NGK Movie
NGK Movie

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைதொடர்ந்து தற்போது இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இதன் உச்சமாக இப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு இந்தியாவில் இதுவரை வேறெந்த நடிகருக்கும் வைக்காத அளவு மிகப்பெரிய கட் அவுட்டை திருவல்லூரில் வைக்க இருக்கிறார்களாம்.

இப்படம் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணிநேரம் முப்பது நிமிடங்கள் எனும் தகவல் ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.