NGK Release

NGK Release : சூர்யாவின் NGK ரிலீசால் அன்று வெளியாகி இருந்த விஜய் தேவரகொண்டாவின் திரைப்படம் ரிலீஸ் தள்ளி போயுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள NGK திரைப்படம் மே 31-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை செல்வராகவன் இயக்க எஸ். ஆர். பிரபு தயாரித்துள்ளார்.

சூர்யா 38 : பட்டய கிளப்பும் கூட்டணி – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் கடந்த தீபாவளிக்கே வெளியாக இருந்தது. ஆனால் ஸ்ட்ரைக், இது அது என தள்ளி போய் கொண்டே இருந்தது.

இவற்றையெல்லாம் கடந்து ஒரு வழியாக இப்படம் மே 31-ம் தேதி வெளியாக உள்ளது. இதே நாளில் தான் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் திரைப்படமும் ரிலீசாக இருந்தது.

உறுதியானது NGK ரிலீஸ் தேதி – சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்.!

சூர்யாவின் பட ரிலீஸை படக்குழு உறுதி செய்து விட்டதால் டியர் காம்ரேட்ரிலீஸை படக்குழு தள்ளி வைத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.