NGK Release Update

NGK Release Update : சூர்யாவின் NGK படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புகள் நிறைவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

அதன் பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூர்யா NGK படம் தீபாவளிக்கும் இல்லை பொங்கலுக்கும் இல்லை வரும் போது வரும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது . நவம்பர் மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க உள்ளதாம்.

தொடர்ந்து 20 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன. பொங்கலுக்கும் படம் ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி விட்டதால் பிப்ரவரி மாதத்தில் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஜனவரி 26 குடியரசு தினத்திலும் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here