NGK Release Date
NGK Release Date

NGK Release Date : சூர்யா நடித்து வரும் NGK படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்திலும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 எனும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் கொச்சியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

தற்போது கொச்சியில் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து விரைவில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படக்குழுவினர் இப்படத்தை வரும் ஏப்ரல் 14-ல் அதவாது தமிழ் வருட பிறப்பு அன்று வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் சூர்யா ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டில் செம கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது, என்ன ரசிகர்களே கொண்டாட தயாரா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.