Suriya NGK

NGK Album : NGK படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்க் மற்றும் பலர் நடித்து வரும் படம் NGK. எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ரசிகர்கள் பலரும் தொடர்ந்து NGK படத்தின் அப்டேட் கேட்டு ட்விட்டரில் படக்குழுவினரை நச்சரித்து வந்தனர். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஒருவழியாக அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் இப்படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது தான்.

இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.