NGK Kerala Box Office : Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | NGK Movie | Latest Cinema News, Tamil Cinema News

NGK Kerala Box Office :

கேரளாவில் இப்படம் முதல் நாளில் ஒரு கோடியே 40 லட்சம் வரை வசூல் செய்த அசத்தியுள்ளது ஒரு தமிழ்ப் படமாக கேரளாவில் இதன் வசூல் நிச்சயம் ஒரு பெரிய வசூல் தான்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

என்.ஜி.கே படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? ஷாக்கான தகவல்!

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.

ஆனால் வசூலைப் பொறுத்தவரை எதிர்பார்ப்பு இருந்ததால் இப்படத்தின் ஓபனிங் நன்றாகவே வந்துள்ளது.

குறிப்பாக கேரளாவில் இப்படம் முதல் நாளில் ஒரு கோடியே 40 லட்சம் வரை வசூல் செய்த அசத்தியுள்ளது. ஒரு தமிழ்ப் படமாக கேரளாவில் இதன் வசூல் நிச்சயம் ஒரு பெரிய வசூல் தான்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.