NGK Interval Surprise Secret Leaked on Internet.
NGK படத்தின் இன்டெர்வலில் ரசிகர்களுக்கு இன்னொரு சார்பைஸ் காத்துக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

NGK Interval Surprise : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா முதல் முறையாக செல்வ ராகவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் NGK. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் மே 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த இளம் இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா? என்னவொரு ஆச்சரியம்?

சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்களிலேயே NGK தான் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. மேலும் இந்த படத்திற்கு தமிழகத்தை தாண்டி ஆந்திரா, கேரளா, தெலுங்கானா என பல மாநிலங்களில் கட் அவுட், பேனர் என வைக்கப்பட்டு இருப்பதால் படத்தின் ரிலீஸ் களைகட்டி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க தற்போது சூப்பர் தகவல்கள் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது NGK பட இண்டெர்வலில் கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீஸர் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும்அறிவிப்பு வரவில்லை.

NGK-க்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – பார்த்து பார்த்து ரசிக்கும் சூர்யா ரசிகர்கள்.!

இருப்பினும் சூர்யா ரசிகர்கள் அப்போ மே 31 முதல் எங்களுக்கு டபுள் ட்ரீட் தான் என கொண்டாடி வருகின்றனர்.

கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.