NGK hidden Details : Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | NGK Movie | Kollywood

 NGK hidden Details :

இந்த படத்தில் சூர்யா ரகுல் ப்ரீத் சிங்கை காதலிக்கிறாரா இல்லையா என்பது பலருக்கும் ஒரு கேள்வியாகவே உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

நயன்தாரா வழிதான் சரி; அஞ்சலி எடுத்த அதிரடி முடிவு!

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக பலரும் இப்படம் புரியவில்லை என்றும் இதன் கதாப்பாத்திரங்களில் தெளிவு இல்லை என்றும் கூறியிருந்தனர்.

அதேபோல் இந்த படத்தில் சூர்யா ரகுல் ப்ரீத் சிங்கை காதலிக்கிறாரா இல்லையா என்பது பலருக்கும் ஒரு கேள்வியாகவே உள்ளது.

இதற்கு தற்போது டிவிட்டரில் விளக்கமளித்துள்ள செல்வராகவன், சூர்யா – ரகுல் பங்குபெறும் ஹோட்டல் காட்சியிலேயே இதற்கான விடை இருப்பதாகவும் அதை கண்டுபுடியுங்கள் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here