NGK day 1 chennai collection : NGk Trailer | Suriya | Sai pallavi | Yuvan | Selvaraghavan | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

NGK day 1 Chennai collection :

சென்னையில் இப்படம் முதல் நாளில் ஒரு கோடியே 3 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

மிஸ்டர் லோக்கல் போனால் என்ன.. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்த வாரம் செம சர்ப்ரைஸ்!

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

எனினும் எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்திற்கு ஓப்பனிங் நன்றாகவே கிடைத்துள்ளது குறிப்பாக சென்னையில் இப்படம் முதல் நாளில் ஒரு கோடியே 3 லட்சம் வரை வசூல் செய்துள்ளது இதன் மூலம் சென்னையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.