NGK Audio Launch

NGK Audio Launch : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தளபதி 63 படத்தில் வில்லன் ஜாக்கி ஷெராப்பின் ரோல் இதுதான் – வெளிவந்த புதிய அப்டேட்!

அண்மையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைதொடர்ந்து இப்படத்தின் மற்ற அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

பொதுவாக மாஸ் நடிகர்கள் நடிக்கும் படங்களின் போஸ்டரில் ஹீரோயினின் முகத்தை காட்ட மாட்டார்கள். பெரும்பாலும் ஹீரோக்கள் மட்டுமே அதில் இருப்பார்கள்.

ஆனால் என்.ஜி.கே-வின் இந்த புதிய போஸ்டரில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இரு பக்கங்களில் இடம்பெற்றிருந்தனர். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.