Next Week Captain in Bigg Boss

ரியோ ராஜ் அடுத்த வார பிக் பாஸ் வீட்டில் தலைவராகி நேரடியாக பைனலுக்கு செல்ல உள்ளார்.

Next Week Captain in Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரப் போகிறார் என்பது 100% உறுதியாகிவிட்டது. ஒருவேளை டபுள் எவிக்சன் ஆக இருந்தால் ஆஜித்துடன் ஷிவானியின் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்த வார தலைவருக்கான நேற்று நடந்து முடிந்தது. அன்பு டீமை சேர்ந்த ரியோ, சோம் சேகர் மற்றும் ஆஜித் ஆகியோர் டாஸ்கில் கலந்து கொண்டனர்.

வழக்கம் போல ஆஜித் மற்றும் சோம் சேகர் சொதப்ப ரியோ ராஜ் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தலைவர் ஆகியுள்ளார். இதனால் அவர் நேரடியாக பைனலுக்கு செல்கிறார்.

பிக் பாஸ் டைட்டிலையும் விஜய் டிவி ரியோவுக்கு தூக்கி கொடுத்து விடுமா அல்லது ரம்யா பாண்டியனுக்கு கொடுக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்களின் கருத்துப்படி பிக் பாஸ் டைட்டில் வெல்ல ஆரிக்கு அதிக தகுதி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.