சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

News Anchor Kanmani Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் கண்மணி. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு திருமணமா? திருமண கோலத்தில் வெளியான புகைப்படங்கள்

சமீபத்தில் இவர் டேக்கா என அழகாக கேட்டு செய்தி வாசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்தநிலையில் தற்போது இவர் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஓமைகாட் கண்மணிக்கு கல்யாணமா என கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் உண்மையில் அவருக்கு திருமணம் இல்லை. வெளியான புகைப்படங்கள் திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் மட்டும் தான் என தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.