நானே வருவேன் படத்தின் புதிய டைட்டில் இணையத்தில் வெளியாகியுள்ளது.

New Title of Nane Varuven : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தனுஷ் 43 அந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் மட்டுமல்ல தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

இணையத்தில் லீக் ஆன நானே வருவேன் படத்தின் புதிய டைட்டில் - இது செம்ம மாஸா இருக்கு.!!

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் டைட்டில் தனுஷிற்கு பிடிக்கவில்லை அதனால் புதிய டைட்டிலை மாற்ற படக்குழுவினர் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்திற்கு என்ன டைட்டில் வைத்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. நானே வருவேன் டைட்டிலை காட்டிலும் ராயன் டைட்டில் செம மாஸா இருப்பதாக தனுஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.