செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் நானே வருவேன் படத்தின் டைட்டில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

New Title For Naane Varuven Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று நானே வருவேன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி சில கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் தனுஷ்க்கு பிடிக்கவில்லை என தகவல் பரவிய நிலையில் தற்போது படக்குழு படத்திற்கு புதிய டைட்டில் ஒன்றை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்திற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விமல் மற்றும் தம்பி ராமைய்யா கலந்துகொண்ட Production No.3 பூஜை..! | Vimal | Thambi Ramaiah | Tamil HD