New Shows in Sun Tv

விஜய் டிவியை ஓரங்கட்ட 3 புதிய நிகழ்ச்சிகளை களமிறக்க உள்ளது சன் டிவி. அது என்னென்ன நிகழ்ச்சி என்பதைப் பார்க்கலாம் வாங்க.

New Shows in Sun Tv : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக சன் டிவி பல்வேறு நிகழ்ச்சிகளை களமிறங்க உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு போட்டியாக சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற இன்டர்நேஷனல் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது.

மேலும் சன் டிவியில் சும்மா கிழி என்ற நிகழ்ச்சி யூடியூப்ல பிரபலங்களை வைத்து ஒளிபரப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிரபலங்கள் ஜோடியாக பங்கேற்கும் ரௌடி பேபி என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைகாட்சிகளுக்கு எதிராக சன் டிவி கையில் எடுத்துள்ள இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.