New Rules on Corona Awareness
New Rules on Corona Awareness

கொரோனா கட்டுபாடுகளை மீறினால் ரூபாய் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழகத்தில் பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

New Rules on Corona Awareness : சீனாவில் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு தப்பாத நாடுகளே இல்லை என்று கூட சொல்லலாம் ‌

அந்த அளவுக்கு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்திலும் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தனிமனித இடைவெளி, முகக்கவசம், அடிக்கடி கைகளைக் கழுவுதல், அறிகுறி இருந்தால் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

கொரோனா ஒழிப்பில் பக்காவா ஒர்க் அவுட் ஆன அஜித்தின் ஐடியா.. நன்றி தெரிவித்த கர்நாடக துணை முதல்வர்!

இருப்பினும் பல இடங்களில் விதிமுறைகளை மீறி பலர் நடந்து கொண்டு தான் இருக்கின்றனர். இவைகளை கட்டுப்படுத்த இனி கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் துணை சுகாதார இயக்குனர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.