New rule in super over
இங்கிலாந்து, நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட குழப்பத்தால் விதிமுறைகள் மாற்றம்.

New rule in super over :  இங்கிலாந்து, நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிராவில் முடிந்தது.

இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவர் சமனில் முடிய அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது கிரிக்கெட் உலகில் பல சர்ச்சைகளைக் எழுப்பியது. முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் ஐசிசி-யின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் கேப்டனாக ஸ்மித் .!

இந்நிலையில் துபாயில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ‘இனி ஐசிசி நடத்தும் போட்டிகளில் போட்டி சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் வீசப்படும்.

பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படாது. அதே சமயம் லீக் போட்டிகள் சமனில் முடிந்தால் அது டையாகவே கருதப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here