பொங்கலுக்கு வெளியாக இருந்து தள்ளி போன வலிமை எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

New Release Date Details of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை இவ்வாறு குறி வைக்கக் கூடாது : சித்தார்த் பதிவுக்கு, சாய்னா வாய்ஸ்

இந்த தேதியில் தான் வெளியாகப் போகிறதா வலிமை?? வெளியான அதிரடி அப்டேட்

படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வலிமை படம் ரிலீஸ் தள்ளிபோனது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இறைவனுக்கு ரொம்ப நன்றி – டாக்டர் பட்டம் குறித்து உருக்கமாக பேசிய Silambarasan! 

இந்த தேதியில் தான் வெளியாகப் போகிறதா வலிமை?? வெளியான அதிரடி அப்டேட்

அதாவது இந்த படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. ‌‌