New Poster of Ponniyin Selvan

பொற்காலம் மீண்டும் திரும்புகிறது என பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

New Poster of Ponniyin Selvan : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் தற்போது தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

விவகாரங்கள் குறித்து, விவாதிக்க தயார் : ‘குடைபிடித்தபடி’ பிரதமர் மோடி பேச்சு

இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி, த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக பொன்னியின் செல்வன் ஒன்று என்ற பெயரில் புதிய போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொற்காலம் திரும்புகிறது என்ற பெயரோடு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தீனா படத்தில் அஜித் ஓட்டிய Bullet Bike யாருடையது தெரியுமா..? | Thala Ajith | Dheena | Latest News HD

இந்த படத்தின் முதற் கட்ட படபிடிப்பு தாய்லாந்தில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.