நானே வருவேன் படத்திலிருந்து தனுஷ் இன் நியூ லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

New Poster of Naane Varuven : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவரது நடிப்பில் இறுதியாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற படத்திலும் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

நானே வருவேன் படத்தில் இருந்து வெளியான தனுஷின் நியூ லுக் போஸ்டர் - தெறிக்கவிடும் ரசிகர்கள்

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் இன் நியூ லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.