New Policies on Electronic Production in Tamilnadu
New Policies on Electronic Production in Tamilnadu

தமிழகத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்தி அடுத்த 5 ஆண்டில் பல மடங்கு உயர்த்த பல்வேறு சலுகைகளை அளித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

New Policies on Electronic Production in Tamilnadu : இந்தியாவில் தமிழகத்தின் மின்னணு உற்பத்தி 16 சதவீதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கைப்பேசி கணினி உற்பத்தி தொழில் துறைக்கு தேவையான மின்னணு பொருட்கள் நுகர்வோர் மின்னணு பொருட்கள் போன்றவை தொடர்ந்து தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மின்னணு பொருட்கள் உற்பத்தி கொள்கையில் புதிய அம்சங்களை தேதி தமிழக அரசு புதிய உற்பத்தி கொள்கையினை வெளியிட்டுள்ளது.

ஆட்டோமொபைல், ஆடை, மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்திற்கு தேசிய அளவில் மூன்றாவது இடம் – தமிழக முதல்வர் பழனிசாமி பெருமிதம்

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவது..

2025-க்குள் ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் மின்னணு துறையின் உற்பத்தியை 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு.

மின்னணுத் துறையில் முதலீடு செய்பவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மின்னணுத் துறையில் முதலீடு செய்பவர்களுக்கு 30% மூலதன மானியம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் காலக் கடன்களுக்கு அதிகபட்சமாக 5 சதவீதம் வரை வட்டி மானியம் என தெரிவித்துள்ளார்.

நிலக்குத்தகைக்கான மானியம் தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க நிலம் வாங்குவதற்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துக் கோவில்களுக்கும் தொழிற் பயிற்சி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கும் அதிரடி திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர்!

முதல் முறையாக பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மாதம் ஒன்றிற்கு ஆறாயிரம் ரூபாய் வரை பயிற்சி மானியம் மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6000 ரூபாய் வரை பயிற்சி மானியம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அறிவுசார் மூலதனம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரச்சான்று மானியம், காப்புரிமை விண்ணப்பங்களுக்கு 50 லட்சம் வரை 5% மானியம்.

தரச்சான்றிதழ் மானியம் ஒரு நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்து ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தமிழகத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தி 25 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.