New Names for Chennai Metro Stations : சென்னையில் மக்கள் அதிகம் உபயோகிக்கும் பிரதான மெட்ரோ ரயில் நிலையங்களான,சென்ட்ரல், கோயம்பேடு மற்றும் ஆலந்துறை முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியாவது: பிரதான மெட்ரோ நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பெயர்களை சூட்டலாம் என உயர்நிலை குழு பரிந்துரை செய்தது.

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் அதிரடி மாற்றம் – புதிய பெயர்களை அறிவித்தார் தமிழக முதல்வர்.!

அதை ஏற்று, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என்பது “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் என்பது “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி ராமகிருஷ்ணன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம்” என அழைக்கப்படும்.

இதேபோன்று, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிலையம் என்பது “புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.