உதயநிதி ஸ்டாலினுக்கு சூப்பரான புதிய பட்டப்பெயர் ஒன்றைப் வைத்துள்ளது இடிமுழக்கம் தயாரிப்பு நிறுவனம்.

New Name to Udhayanithi Stalin : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சீனு ராமசாமி. சென்டிமென்ட் உடைய கதைகளை இயக்கி ரசிகர்கள் மனதல் தனி இடம் பிடித்தவர். இவரது இயக்கத்தில் அடுத்ததாக ஆக்ஷன் திரைப்படமாக்க ஜிவி பிரகாஷ் நடிப்பில் இடி முழக்கம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

தமிழகத்தில், மாணவர்களுக்கு பாடங்களை குறைக்க முடிவு?

இந்த படத்தினை ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். இது இவருடைய இரண்டாவது தயாரிப்பாகும். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரால் வெளியிடப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடுவார் என வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் அவருக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய பட்டப்பெயர் வைத்து அவரது பெயரை குறிப்பிட்டுள்ளனர். பலரும் கவனிக்கத் தவறிய அந்த விஷயத்தை இப்போது பார்க்கலாம்.

நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த நாகினி Mouni Roy – இப்போ இதான் Trend 

அதாவது உதயநிதி ஸ்டாலின் அரசியலில் தற்போது பல்வேறு புரட்சிகளை செய்து வருவதால் அவருக்கு மக்கள் அன்பன் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பட்டப்பெயர் வைத்துள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக முகேன் ராவ் ஹீரோவாக நடித்துள்ள வேலன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.