மே தின சிறப்பு நிகழ்ச்சியாக தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பாக உள்ள புதிய திரைப்படங்கள் குறித்துத் தெரிய வந்துள்ளது.
New Movie Telecast Update on May 1 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்கின்றன என்பதை தாண்டி அந்த படம் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது எந்த அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கை தெரிகிறது எனவும் ரசிகர்கள் கவனிக்க தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் நாளை மே தின சிறப்பு நிகழ்ச்சிகளாக தொலைக்காட்சி சேனல்களில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. குறிப்பாக சன் டிவியில் மாலை ஆறு முப்பது மணிக்கு நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் டிவியில் மதியம் 1.30 மணிக்கு அருகே சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் முதல் முறையாக தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகிறது.
அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் அஜித் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த வலிமை திரைப்படம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
முதல் முறையாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் இந்த மூன்று படங்களில் எந்தப் படம் டிஆர்பி அதிக ரேட்டிங் பெற்று வெற்றி பெற போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.