வாடிவாசல் படம் குறித்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள ஃபேன் மேட் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
New Fan made Poster For Vaadivasal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட அதுவும் சமூக வலைதளங்களில் செம வரவேற்பை பெற்று வருகிறது.
இதோ அந்த போஸ்டர்