YouTube video

New Factories Launch in TamilNadu : கொரோனா தாக்கிய இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.10 ஆயிரத்து 55 கோடி மதிப்பில் முதலீடுகளை ஈர்த்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 14 திட்டங்களில் முதல் கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் திருப்பூரில் 810 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக ரூ.6,300 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

Edapadi K Palaniswamy

இதே போல் ராமேஸ்வரத்தில் 50 மெகாவாட் காற்றாலை மின்சார திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதில், 2,420-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்குவதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில், பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா தனது ஆலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.250 கோடி கோடி மதிப்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் தொழில்துறை தளவாட பூங்கா அமைக்கும் திட்டத்தில் ரூ.750 கோடி முதலீட்டை முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

சென்னை அருகே டேட்டர் சென்டர் திட்டத்தை அமைப்பதற்காக ரூ.750 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதில் 550 பேர்களுக்கு வேலை கிடைக்கும். இது தவிர சென்னை அருகே கார்பன் பைபர் தகடுகளை தயாரிப்பதற்கு ரூ.200 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதில் 250 பேர்களுக்கு வேலை கிடைக்கும்.

மின் குப்பைகளை அகற்றுவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் ஒரு மின் கழிவு மேலாண்மை வசதியை அமைக்க ரூ.50 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம். சுமார் 750 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சென்னை அருகே ஒரகடத்தில் காற்றாலைகளை தயாரிப்பதற்கான விரிவாக்க திட்டமும் உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் டயர்கள் தயாரிப்பதற்கான விரிவாக்க திட்டத்தை நிறுவ அப்பல்லோ டயர்ஸ் முன்வந்துள்ளது.

அந்நிறுவனம் இந்த விரிவாக்க திட்டத்தில் ரூ.505 கோடி முதலீடு செய்ய உள்ளது. ரூ.109 கோடி முதலீட்டில், தென் கொரியாவின் ஹூண்டாய் வியா சென்னை அருகே ஸ்ரீ பெரம்புதூரில் தனது வசதியை விரிவுபடுத்த உள்ளது.

இதுபோன்ற தொடர் முதலீடுகளால் தமிழகம் பொருளாதார வாழ்வின் பல்வேறு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணம் இதனால் அரசு அலுவலர்கள் கூறுகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.