பொன்னியன் செல்வன் திரைப்படம் ரூ.400 கோடியை தாண்டி வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். அவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை தெறிக்க விட்ட பொன்னியின் செல்வன்1…!!! ரூ 400 கோடியை தாண்டி புதிய சாதனை!.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடியை வசூல் செய்திருந்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்தில் 200 கோடியை வசூலித்த முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் ரூ.400 கோடியை தாண்டி இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை தெறிக்க விட்ட பொன்னியின் செல்வன்1…!!! ரூ 400 கோடியை தாண்டி புதிய சாதனை!.

திரையரங்குகளில் இன்னும் கூட்டம் குறையாமல் குடும்பமாக அனைவரும் ஆர்வத்தோடு கண்டு களித்து வருவதால் இந்த வாரத்தில் இப்படம் ரூ.500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வசூல் ரீதியாக வரலாற்று சாதனை படைத்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.