இரண்டு நாட்களுக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றம் குறித்து விஜய் டிவி வீடியோ வெளியிட்டுள்ளது.

New Changes in Vijay TV : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். கூட்டுக் குடும்ப கதையை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

இரண்டு நாட்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீர் மாற்றம் - விஜய் டிவி வெளியிட்ட வீடியோ‌.!!

இந்த சீரியலில் மிக விரைவில் பிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தற்போது உண்மையாகி உள்ளது‌.

வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் பிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இந்த இரண்டு நாட்கள் மட்டும் 2.30 மணி நேரம் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பாகும் விஜய் டிவி தெரிவித்துள்ளது.