சுந்தரி சீரியலில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது.

New Changes in Sundari Serial : தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல்களில் ஒன்று சுந்தரி. இதில் நாயகியாக டிக்டாக் பிரபலம் கேப்ரில்லா நடித்து வருகிறார். சீரியல் நாயகன் குடும்பத்தாரின் நிர்ப்பந்தத்தால் சுந்தரியை மணந்து கொள்கிறார். ஆனால் இவருடன் வாழப் பிடிக்காத ஹீரோ குடும்பத்தாருக்கு தெரியாமல் அழகான பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதனை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதை.

சுந்தரி சீரியலில் நடந்த அதிரடி மாற்றம்.. இனி இவருக்கு பதிலாக நடிக்கப்போவது இவர்தான்.!!

இந்த சீரியல் நாயகியின் மாமா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மனோகர். விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். சில காரணங்களால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகி கொண்டுள்ளார்.

மனோகர் சுந்தரி சீரியலில் இருந்து விலகி கொண்டதையடுத்து அவருக்கு பதிலாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சீரியல் நடிகர் சதீஷ் குமார். இனி இனி இந்த சீரியலில் மனோகருக்கு பதிலாக சதீஷ்குமாரை பார்க்கலாம்.