New Area Opening in EPS Name
New Area Opening in EPS Name

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் புதிய நகர் ஒன்று உதயமாகியுள்ளது.

New Area Opening in EPS Name : முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு பணியாற்றி வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளையும் துரிதமாக செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது சென்னை பெருந்துறை பேரூராட்சியின் பத்தாவது வார்டில் எடப்பாடியார் நகர் என புதிய நகர் உதயமாகியுள்ளது.

இதற்கான பெயர் பலகையை அப்பகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் திறந்து வைத்துள்ளார்.

கொரோனாவை ஒழிக்க அஜித் கொடுத்த ஐடியா – குவியும் பாராட்டுக்கள்..!

நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன.

மாநில அரசு உயர்நிலைப் பள்ளிகளின் மாணவர்களுக்கு மருத்துவ யுஜி படிப்புகளில் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டிற்குள் 7.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு” அதாவது தனியார் கல்லூரிகளில் அரசு இடங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த RTE உள்ளிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடானது கிடைக்கும். இது ஒரு பெரிய மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது.

கல்வி தொலைக்காட்சி : இணையம் அல்லாத மாணவர்களும் வீட்டிலிருந்தே பாதுகாப்பாக கல்வி பயிலும் வகையில் தொலைக்காட்சி மூலம் கல்வி பயிற்றுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒத்திசைவற்ற கற்றலின் நன்மைகளை முன்னிலைப்படுத்துகிறது.

கொரோனா ஒழிப்பில் பக்காவா ஒர்க் அவுட் ஆன அஜித்தின் ஐடியா.. நன்றி தெரிவித்த கர்நாடக துணை முதல்வர்!

வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதலீட்டைப் பெருக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு வழிமுறைகள் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் கொரோனா மருத்துவ செலவுகளை திரும்ப பெற கருவூலத்துறை கமிஷனர் மூலமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ செலவுகளை திரும்ப பெற விரும்புவோர் உரிய விண்ணப்பத்தின் மூலமாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.