நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Netrikann Movie Review : தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா நடிப்பில் அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஹாட்ஸ்டார் விஐபி இல் வெளியாகியுள்ள திரைப்படம் தான் நெற்றிக்கண். இந்த படத்தில் சைக்கோ வில்லனாக அஜ்மல் நடித்துள்ளார்.

திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?
 

வெற்றி பெறுமா நயன்தாராவின் நெற்றிக்கண்? - முழு விமர்சனம் இதோ.!!

கதைக்களம் :

போலீஸ் அதிகாரியாக இருக்கும் நயன்தாரா ஒரு கார் விபத்தில் சிக்கி தன் கண் பார்வையை இழந்து விடுகிறார். கண்பார்வை இழந்த பிறகு போலீஸ் வேலையும் கைவிட்டு சென்று விடுகிறது. பார்வை இல்லாமல் வாழ பழகிக் கொள்கிறார் நயன்தாரா.

பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்யும் சைக்கோ வில்லனான அஜ்மல் நயன்தாராவையும் கடத்தி கற்பழித்து கொல்ல திட்டமிடுகிறார். கால் டாக்சி ஓட்டுனர் போல நயன்தாராவிடம் பேச்சு அவரை காரில் அழைத்துச் செல்கிறார். அப்போது கார் ஒரு பெண்ணின் மீது மோத அந்த உண்மையை மறைத்து நயன்தாராவை அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார் அஜ்மல்.

ஆனால் நயன்தாரா அவரிடம் இருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். இதனால் நயன்தாராவை கொல்ல அஜ்மல் திட்டமிடுகிறார். இறுதியில் என்ன நடக்கிறது? சைக்கோ வில்லன் அஜ்மல் போலீசிடம் எப்படி சிக்குகிறார்? நயன்தாரா எப்படி தப்பித்தார் என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

நயன்தாரா நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை கண் தெரியாதவராக தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை நன்றாக கைகொடுத்து. ஆனால் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை.

ஒளிப்பதிவு :

ஆர் டி ராஜசேகர் தன்னுடைய அழகான கேமரா கைவண்ணத்தால் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

சிம்பு விவகாரத்தில் Modi-யையும் சந்திக்க தயார்! – Silambarasan Mother Usha Rajendar ஆவேச பேட்டி

தம்ப்ஸ் அப் :

1. நயன்தாராவின் நடிப்பு

2. அஜ்மல் நடிப்பு

3. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. வெளிப்படையான டிவிஸ்ட்

2. திரைக்கதை

மொத்தத்தில் நெற்றிக்கண் ஒருமுறை பார்க்கலாம்.