Netrikann Remake Issue
நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய ஆசைப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் அதன் நிலை என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Netrikann Movie Remake Issue : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கவிதாலயா பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விசு கதையாசிரியாராக பணியாற்றிய திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மேனகா நடித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுவதாக கூறி இருந்தார்.

சத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.!

இதனையடுத்து இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதன் பின்னர் நடிகரும் இயக்குனருமான விசு வீடியோ ஒன்றில் தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது கேஸ் போடுவேன், என்னை பத்தி உங்க மாமனார் கிட்ட கேட்டு பாருங்க என்றெல்லாம் பேசி இருந்தார்.

இதனையடுத்து தனுஷ் விசுக்கு போன் செய்து சார் எனக்கு நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்யுற ஐடியா இல்ல. இதை பத்தி இனிமே பேசாதீங்க என வேண்டுகோள் வைத்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.