Netizens trending goback modi in chinese language | Goback modi| Netizens| Twitter trending| Chinese launguage|Tamilnadu news | Xi Jinping
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் #Gobackmodi ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கிறது.

Netizens trending goback modi in chinese language – பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்டி உள்ளிட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் பல அதிரடி முடிவுகளால் தமிழகத்தில் பாஜகவிற்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.

இதைத்தொடந்து கடந்த சில வருடங்களாகவே பிரதமர் மோடி தமிழகம் வரும் போதும் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் #Gobackmodi என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐஐடி-யின் 56வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மோடி சென்னை வந்தபோதும் #Gobackmodi டிரெண்டிங் ஆனது.

மாமல்லபுரத்தில் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை.. சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை.!!

இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி என இருவரும் இன்று சென்னை வந்துள்ளனர்.

மகாபலிபுரம் சென்று சுற்றிப்பார்க்கும் அவர்கள் அதன்பின் இரு நாடுகளுக்குடையேயான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

 

இதைத்தொடர்ந்து இன்றும் டிவிட்டரில் #Gobackmodi டிரெண்டிங் ஆகியுள்ளது. அதேபோல் சீன மொழியில் #回到莫迪 என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங் ஆகியுள்ளது. அதற்கு ‘திரும்பிப் போ’ என அர்த்தமாம்.

மேலும், #TamilNadu_welcomes_XiJinping என்கிற ஷேஷ்டேக்கையும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

Netizens trending goback modi in chinese language

சீன அதிபர் வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அது எங்களுக்கும் பெருமைதான். ஆனால், மோடியைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என அவர்கள் கூறி வருகின்றனர்.