Nethili kulambu : 

தேவையான பொருட்கள் :

மொச்சைப்பயறு – 200 கிராம், நெத்திலி மீன் – 1/2 கிலோ,
சிறிய வெங்காயம் – 1/4 கிலோ, தக்காளி – 1/4 கிலோ, பூண்டு – 10 பல்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், தனியாத்தூள் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
புளி – எலுமிச்சம்பழ அளவு,
எண்ணெய் — தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 5.

பட்டய கிளப்பும் குப்பத்து ராஜாவின் மீன் குழம்பு பாடல்.!

செய்முறை:

1) மொச்சைப் பயறை வறுத்து ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

2) மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

3) ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும்.

4) பயிறுடன் அனைத்து பொடிகளையும் சேர்த்து நன்கு கொதித்து வெந்ததும், நெத்திலி மீனை சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கவும்.

5) சுவையான மொச்சை நெத்திலி மீன் குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here