அமேசான் நிறுவனத்தை முந்திக்கொண்டு பல கோடிகளை கொட்டிக் கொடுத்து துணிவு படத்தை கைப்பற்றியுள்ளது பிரபல நிறுவனம்.

Netflix Bagged Thunivu OTT Rights : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் பாங்காங்கில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் OTT உரிமையை பல கோடிகளை கொடுத்து நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.