Nervous swelling
Nervous swelling

Nervous swelling :

நரம்பு வீக்கம் ( வெரிக்கோஸ்)

வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும்.

இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும்,வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும்.

கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

இதற்கு பெயர் வெரிகோஸ் வெயின் என்னும் நோய், இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? உண்மைதான். இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான்.

கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல.

வெரிக்கோஸ் ஏற்பட காரணங்கள்

அதிக நேரம் நிற்பது, அதிகமாய் கால்களுக்கு சிரமம் தருவது, வயது, இரத்த ஓட்டத்தில் பிரச்சினைகள், உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், ஜின் போன்ற சில காரணங்களாகும்.

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது போன்ற ரத்த நாள வீக்கம் நோய் ஏற்படுவது இயல்பு .கருவின் வளர்ச்சியால் கர்ப்பப்பை நரம்புகளை அழுத்துவதால் இந்த நோய் ஏற்படலாம்.

இயற்கையான சிகிச்சை முறைகள்:

■ நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்கவும்.

■ உடல் எடையை குறைக்க வேண்டும்.

■ நரம்பு வீக்கம் இருப்பவர்கள் பாதி டம்ளர் பசலைக்கீரைச்சாறு எடுத்து அதனுடன் அரை டம்ளர் கேரட் சாறு கலந்து குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.

■ சோயா பீன்ஸை பச்சையாக எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்து தேன் கலந்து இரவு படுக்கும் முன் குடித்து வந்தால் நரம்பு வீக்கம் குறையும்.

■ ஆளி விதையை எடுத்து பசும்பால் விட்டு விழுதாக அரைத்து 15 மில்லி பசும்பாலில் கலக்கி குழைத்து வெண்ணெய் சேர்த்து கலக்கி தடவி வந்தால் நரம்பு வீக்கம் குறையும்.

■ ஆரஞ்சு மரத்தின் பூவை எடுத்து ஒரு டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக குறையும் வரை சுண்டக்காய்ச்சி அதில் தேன் கலந்து குடித்து வந்தால் நரம்பு வீக்கம் குறையும்.

■ துளசி விதைகளை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும் இதனால் நரம்பு வீக்கத்தில் ஏற்படும் வலி குறையும்

■ நாயுருவி வேர், கரிசலாங்கண்ணி ஆகியவை சாப்பிட்டு வர நரம்பு வீக்கம் குணமாகும்.

■ வேப்பம்பூ வேப்ப விதை இவைகளை அரைத்து கட்ட சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here