Nerkondapaarvai First Look
Nerkondapaarvai First Look

Nerkondapaarvai First Look – தல 59 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தல 59 படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்க வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிசந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது நேர் கொண்ட பார்வை என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கூடவே பர்ஸ்ட் லுக் போஸ்டரும் செம மாஸாக வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Nerkondapaarvai First Look
Nerkondapaarvai First Look