NerKonda Paarvai :
NerKonda Paarvai :

NerKonda Paarvai :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

அஜித்தை சந்தித்த தருணம் – நெகிழ்ச்சி பொங்க பேசிய கோபிநாத்!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில்,

பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இப்படத்தில் அஜித் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் இதுவே.

இவர்போக தற்போது இன்னொரு பாலிவுட் நடிகையும் இப்படத்தில் நடித்துள்ளாராம்.

தேவ் டி, கல்லி பாய் போன்ற புகழ்பெற்ற இந்தி படங்களில் நடித்த கல்கி கோச்லின் இப்படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். இவருக்கும் இதுதான் தமிழில் அறிமுக படம் என்பது குறிப்பிடத்தக்கது.

NerKonda Paarvai :

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.