Nerkonda Paarvai Team : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja, Kollywood

Nerkonda Paarvai Team :

அஜித்துக்கு ஏற்ப தமிழில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பதாகவும் அவருக்கு படத்தில் சண்டக்காட்சிகள் எல்லாம் இருப்பதாகவும் படக்குழு உறுதியாக கூறியுள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் அஜித் குறைந்த காட்சிகளே வருவார் என்றும் டிரைலரில் காட்டுவது சில காட்சிகள்தான் என்றும் ஒரு செய்தி வெளியாகி வைரலாக பரவி வந்தது.

ஆனால் இதை படக்குழு மறுத்துள்ளனர். அஜித்துக்கு ஏற்ப தமிழில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பதாகவும் அவருக்கு படத்தில் சண்டக்காட்சிகள் எல்லாம் இருப்பதாகவும் படக்குழு உறுதியாக கூறியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.